முத்து விஜயராஜ முத்துராமலிங்க சேதுபதி 12 வயதில் ராமநாதபுரம் மன்னரானார். ஆங்கிலேயர்கள், ஆற்காடு நவாப்புகளின் வணிகத்தை முடக்க விற்பனை வரி, சுங்க வரி விதித்தார். ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் 1772ல் மன்னர் முத்து ராமலிங்க சேதுபதி, அவரது தாயார், சகோதரி ஆகியோரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 10 ஆண்டு சிறையில் இருந்த மன்னரின் தாயார், சகோதரி சிறைக்குள்ளேயே இறந்தனர்.
ராமநாதபுரத்தில் கலவரம் மூண்டதால் முத்துராமலிங்க சேதுபதி விடுதலை செய்யப்பட்டார். ஆங்கிலேயர் களின் வணிகத்தை முடக்கியதால், 'ரிபெல்' முத்துராமலிங்க சேதுபதி என, அழைக்கப்பட்டார்.
மீண்டும் 2 வது முறையாக அவரை ஆங்கிலேயர் கைது செய்தனர். 24 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு 1809 ல் சிறையிலேயே இறந்தார்.

No comments:
Post a Comment