காளையார்கோவில் வரலாற்றில் ஒரு கருப்பு தினம்
25-6-1772 காளையர்கோவில் வரலாற்றில் ஒரு கருப்பு தினம். நயவஞ்சம் கம்பளம் விரித்த நாள்:-
கும்பினியர்கள் காளையர்கோவிலில் நிறைவேற்றிய நயவஞ்சகத்தை வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் வெட்கத்துடன் எழுதி வைத்துள்ளனர்.
Indian Record Service Vestiges of old Madras(1640-1800) Vol -lll என்ற நூல் லண்டனில் வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தின் 71 ம் பக்கத்தில் உள்ள செய்தியின் சுருக்கம் :-
Londan Packet என்ற பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களும், அச்சபையின் உரிமையாளர்கள் அணைவரும் கூடியிருந்தனர்.
ஜெனரல் சுமித் கர்ளல் பான்சோர் இருவரும் சிவகங்கையில் அறகேற்றிய நயவஞ்சக செயலை கேட்க் சகியாம பல வெள்ளை முதலாளிகள் வெளியேறினர். மற்ற அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்திய நிகழ்வு தான், ஆங்கிலேய வரலாற்றின் அவமான சின்னமாக விழுந்தது.
ஜெனரல் ஸ்மீத் தனது நவாப் அரசருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். இருவரும் இந்தியாவில் உள்ள ஒரு மன்னரை எதிர்த்துப் போரிட முடிவு செய்தனர்.
இந்த போரில் சிவகங்கை சீமையின் படைவீரர்கள் என்னிக்கை மதகுக்கு வரும் வெள்ளம் போல் மணிக்கு மணி அதிகரித்தது. சிவகங்கை வீரர்கள் கும்பினியர்களை குற்றுயிரும் குலையுருமாக்கினார். இதனால், தளபதி மார்டீன்சும், ஜோசப் ஸ்மீத்தும் பேச்சுவார்த்தை நடத்துவது போல் பாசாங்கு செய்தனர். இதனை தூதுவன் மூலம் மன்னர் முத்துவடுகநாததேவருக்கு தெரிவித்தனர். அத்தூதுவனோ பேச்சுவார்தை சுமுகமாக முடிந்ததாக எடுத்துரைத்தான். இதை நம்பிய மன்னரும் படைகளை பின்வாங்கச் செய்தார்.
மன்னர் எந்த பாதுகாப்புமின்றி, காளையர் கோவிலில் வழிபாட்டிற்க்காக இளையராணி கெளரி நாச்சியாருடன் வந்தார். மன்னரைக்கான மக்கள் கூட்டம் அலைமோதியது. மன்னரும் மக்களும் போரை எதிர்பாராத நேரத்தில், கர்னல் பான்சோர் காளையர் கோவிலை முற்றுகையிட்டான். மன்னரும் மறவர்களும் ஆயுதங்கள் ஏதுமின்றி நிராயுதபாணியாக நின்ற நிலையில், காளையர்கோவிலில் புகுந்த பான்சோர் மக்களை கொக்களை குருவிகளை சுடுவது போல் சுட்டூ வீழ்த்தினான்.
ஆலயத்தில் உள்ள மற்றவர்கள் மன்னரை தடுத்தனர். போர்க்கவசம் அணியவேண்டிய மன்னனின் மார்பில் சந்தனம் மட்டுமே நிறைந்திருந்தது.
வெற்றுடம்புடன் வெள்ளயர்களை நோக்கி வந்தார் வேந்தர் முத்துவடுகநாததேவர். சந்நிதி வாசலில் சிங்கம் ஒன்று குககைக்குள்ளிருந்து சீறிவருவது போல் நின்றார்.
வீரத்திற்க்கு இலக்கணம் தெரியாத பான்சோரின் துப்பாக்கி குண்டுகள் வீரப்பேரரசரின் மார்ப்பில் பாய்ந்தது.தன்னாட்சிக்கு தன் உயிர் கொடுத்த வீரனை மண்மகள் அனைத்துக் கொண்டாள்.
வாழ்க வீரப்பேரரசர் முத்துவடுகநாததேவர் புகழ்...!!!