Monday, 4 May 2020

சிவகிரி ஜமீன் வரலாறு

ஜமீன்கள் வழக்கொழிந்து போய் ஜாமீன்கள் செய்திப்பரப்பில் ஆக்கிரமித்திருக்கும் காலம் இது. இந்தச் சூழலில் விநோதமான காரணங்களால் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது சிவகிரி ஜமீன். சுவிஸ் வங்கியில் 165 லட்சம் கோடி ரூபாய் பணம் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கோர்ட்டில் சொல்லப்பட்டது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் புதையலை அடுத்த மலைப்பு! ஜமீன் சொத்துகள் என தரப்பட்டிருக்கும் பட்டியலைப் பார்த்தாலோ, சென்னையில் பாதி சிவகிரிக்குச் சொந்தமா என்ற கேள்வி எழுகிறது. ஸ்பென்சர் பிளாஸா, காஸ்மோபாலிட்டன் கிளப், கேம்ப கோலா வளாகம் என 108 இடங்கள் அந்தப் பட்டியலில் வருகிறது.

எது நிஜம்? சிவகிரி ஜமீனை திடீரென சூழ்ந்திருக்கும் இந்த பரபரப்புக்குக் காரணம் என்ன?

மதுரையிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் வாசுதேவநல்லூருக்கு அருகே இருக்கிறது சிவகிரி. ஜமீனின் மாட மாளிகை முட்புதருக்கு நடுவே இடிந்த கட்டிடமாக இருக்க, அந்தக் காலத்து அன்னதான சத்திரத்தில்தான் தற்போதைய ராணி பாலகுமாரி நாச்சியாரும், வாரிசு விக்னேஷ்வர் ராஜாவும் வாழ்ந்து வருகிறார்கள்.

கி.பி. 13ம் நூற்றாண்டிலிருந்து இந்த ஜமீன் வரலாறு ஆரம்பிக்கிறது. பாண்டிய மன்னர்களின் பிரதிநிதியாக இருந்த இவர்களின் அப்போதைய தலைமையிடம் தென்மலை. தற்போது கூட தென்மலையில் ஒரு அரண்மனை உள்ளது.  அதில் சிவகிரி ஜமீனின் உறவுக்காரர்கள் வசிக்கிறார்கள். தொடர்ச்சியான போர்களும் பிரச்னைகளும் ஜமீனை மிகவும் பாதிக்க... தென்மலையிலிருந்து, காட்டுப் பகுதியாக இருந்த சிவகிரிக்கு ஜமீன் மாற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக வீரத்துடன் போர் புரிந்த வரலாறும் சிவகிரிக்கு உண்டு. 1767ல் ஆட்சி புரிந்த விஜய ரெங்க பாண்டிய வன்னியனும், 1783ல் வீரம்மாள் நாச்சியாரும் வெள்ளையர்களை எதிர்த்தவர்கள். நாச்சியாருக்கு இதனால் ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றவர்களோடு கூட்டணி வைத்திருந்தார்.

 முதலில் எதிர்ப்பு சக்தியாக இருந்த இவர்கள், அதன்பின் ஆங்கிலேயர்களுடன் நல்ல உறவு வைத்துக்கொண்டார்கள். முதல் உலகப் போரின்போது சிவகிரி ஜமீனிலிருந்து படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்கள். அப்படிச் சென்றவர்களில் 89 பேர் இறந்து விட்டனர். இதன் நினைவாக தேவிப்பட்டினம் குன்று பகுதியில் ஆங்கிலேயர்கள் நினைவுச் சின்னம் அமைத்துள்ளார்கள்.

1850-ம் ஆண்டு பட்டத்துக்கு வந்த சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத்தம்பியாரும், அவர் மகன் ராமலிங்க வரகுண பாண்டியனும் ஆங்கிலேயர்களுக்கு வரி வசூல் செய்து தருவதில் முன்னணியில் இருந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் எட்டையபுரம் ஜமீனுக்கு அடுத்து பரப்பளவிலும் வருமானத்திலும் பெரிய ஜமீன் சிவகிரிதான். ராமலிங்க வரகுண பாண்டியன் தனது பூட்ஸ் காலுக்குள் தங்க நாணயங்களை நிரப்பிக்கொண்டு குதிரை மீது ஏறி ஊர்வலம் செல்வது வழக்க மாம். அந்த அளவுக்கு செழிப்பான ஜமீன்; செல்வம் குவிந்து காணப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் வைக்கும் விருந்துக்காக அடிக்கடி இவர்கள் வெளிநாடு செல்வதுண்டு. அந்தக் காலத்தில்தான் சுவிஸ் வங்கி தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும். 

ராமலிங்க வரகுண பாண்டியனின் திருமணத்துக்காக தனியாக கல்யாண மண்டபமே கட்டியிருக்கிறார்கள். சிவகிரி பஸ் நிலையம் அருகே இருக்கும் இந்த கல்யாண மண்டபம் கட்ட, இரும்புப் பாளங்கள் இங்கிலாந்திலிருந்து கப்பலில் வந்துள்ளது; தேக்கு போன்ற மரச்சாமான்கள் சிங்கப்பூரிலிருந்து வந்ததாம். அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த இந்த மண்டபம் எப்போதோ விற்கப்பட்டு விட்டது.
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட நான்கு கோயில்கள் உள்ளன. அவரை கூடுபாறை பாலசுப்பிரமணியர் கோயில், தென்மலை ஸ்ரீதிரிபுரநாதர் ஈஸ்வரன் கோயில், வடக்கு சத்திரம் இராமநாத சுவாமி கோயில், சிவகிரி திருநீலகண்ட சுவாமிகள் கோயில் ஆகியவை அவை. கால்நடை மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், பள்ளிக்கூடம் என எங்கே திரும்பினாலும் சிவகிரியில் இவர்கள் இடமாகத்தான் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் செண்பகவல்லி அணைக்கட்டையும் இவர்கள் கட்டியுள்ளார்கள். 1972ல் இந்த அணையின் ஒரு பகுதி உடைந்து விட்டது. அதைக்கூட தற்போது சீரமைக்க முடியவில்லை.

சிவகிரிக்கு இவர்கள் வந்த பிறகு சங்கிலி வீரப்ப சின்னதம்பியார்தான் முதல் ஜமீன்தார் என்கிறார்கள். அதன்பிறகு செந்தட்டிக்காளை சின்ன தம்பியார். ஜமீன்களின் மூத்த வாரிசுகள் மூலமாக பட்டம் தொடர்ந்து வருகிறது. தற்போது பாலகுமாரி நாச்சியார் ராணியாக உள்ளார். இவரது மூத்த மகன்தான் வாரிசுக்கு வரவேண்டும். ஆனால் 1998ல் நடந்த விபத்தில் விசாக விஷ்ணு வர்த்தன் என்ற சின்னதம்பியார் என்ற அந்த மகன் இறந்து விடவே, தற்போது  சேவக பாண்டியன் என்ற விக்னேஷ்வர சின்னதம்பியார் ஜமீன் பட்டத்துக்கு வந்துள்ளார். இவர்தான் தற்போது சொத்தை மீட்க அலைந்து வருகிறார். சிவகிரி கோயிலில் இவருக்கு முதல் மரியாதை உண்டு. அந்தக் காலத்திலேயே சாதியை ஒழிக்கப் பாடுபட்டவர்கள் சிவகிரி ஜமீன்கள். எனவேதான் இந்த முதல் மரியாதைக்கு ஜமீனை அரண்மனையில் வந்து அழைத்துச் செல்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் மரபாகக் கொண்டுள்ளார்கள். வழக்கில் சிக்கியது, இழந்தது போக மிச்சம் இருக்கும் சொற்ப நிலங்களில் விவசாயம் செய்வது ஒன்றுதான் ஜமீனின் இப்போதைய வருமானம். இப்படி, மரியாதை தவிர எதுவுமே மிச்சமில்லை என்ற நிலையில்தான் இந்த பரபரப்பும் கிளம்பியிருக்கிறது.

கடந்த நூறு ஆண்டுகளாகவே சிவகிரி ஜமீன் சொத்துகள் தொடர்பாக வழக்குகள் நடந்து வருகிறது. ‘ஜமீனை நிர்வகிக்க முடியவில்லை’ என ஒருவர் போய் அரசிடம் ஒப்படைப்பதும், ‘ஜமீன் உரிமை எங்களுக்கு வேண்டும்’ என இன்னொருவர் வழக்கு போடுவதுமாக இது தொடர்கிறது. ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர்கள் பலரும் இப்படி போட்ட வழக்குகள் பல ஆண்டுகளாக இழுபறியில் இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இங்கிலாந்து சென்று வழக்கு நடத்தியவர்களாம் இந்த சிவகிரி ஜமீன்கள்.

‘‘சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீனின் பணம் இருப்பது எங்களுக்குத் தெரியாது’’ என்கிறார் தற்போதைய ஜமீன் விக்னேஷ்வர சின்னதம்பி. அவரது அம்மாவும் ராணியுமான பாலகுமாரி, ‘‘என் கணவரிடம் சொத்து அதிகாரப் பத்திரம் வாங்கியது போல மோசடி செய்து, சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி நடந்திருக்கிறது. இதை எதிர்த்து சட்டப்படி போராடி வருகிறோம். சிவகிரி ஜமீன் சொத்துகள் எங்கெங்கே இருக்கின்றன என்ற தகவல்களும் எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. அரசு தலையிட்டு எங்கள் உரிமையை மீட்டுத் தர வேண்டும்’’ என்கிறார்.
- முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: சுடலை மணி செல்வன்

நன்றி 
குங்குமம் 

Tuesday, 21 April 2020

Saturday, 4 April 2020

சிவகங்கை சீமையின் பொய் வரலாற்றுகளுக்கு விளக்கம்

வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம். காலம் கடந்த கட்டுக்கதைகளின் வடிவமாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றுக்கு மாற்றான தெளிவான ஆதாரங்கள் கிடைத்த பிறகு அவ்வரலாற்றைத் திருப்பி எழுதுவதே சரியான நடைமுறை.
வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்துகொண்டார் என்ற வரலாற்றுப் புனைவு நம்மிடையே உலா வருகிறது. மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நூல்களிலும், வேலு நாச்சியாரைப் பற்றிய வரலாற்று நூல்களிலும் இப்புனைவு தவறாமல் இடம் பெறுகிறது. வேலு நாச்சியாரைப் பெரிய மருது திருமணம் செய்தார் என்பதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

நல்லுறவில் விரிசல்

சிவகங்கை அரசர் முத்துவடுக நாதத் தேவர் போரில் கொல்லப்பட்ட பின்பு அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை மற்றும் மருது சகோதரர்களுடன் வேலு நாச்சியார் விருப்பாச்சிக் காடுகளுக்குச் சென்றார். வயிற்றுப் பிள்ளையுடன் சென்ற வேலு நாச்சியார், எட்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்பு சிவகங்கையைக் கைப்பற்றி அரசியாக முடிசூடிக்கொண்டார். மருது பாண்டியர்கள் வேலு நாச்சியாருக்கு மந்திரி பிரதானிகளாகவும் தளபதிகளாகவும் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள். வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சியை, வெங்கம் உடையனத் தேவருக்கு மணம் முடித்துக் கொடுத்து அவரை சிவகங்கை அரசனாக்கி இருந்தார் வேலு நாச்சியார்.
வெள்ளச்சி இளம் வயதிலேயே இறந்தவுடன், வெங்கம் உடையனத் தேவர், பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளை இரண்டாவதாக மணம் முடித்துக் கொண்டார். இந்த உறவில் ஏற்பட்ட கசப்பினால், வேலு நாச்சியார் தன்னுடைய இறுதிக் காலத்தில் சிவகங்கையில் இல்லாமல், விருப்பாச்சி கோபால் நாயக்கரின் விருந்தினராக இருந்து அங்கேயே இறந்தும் போனார். அந்தக் காலத்தில் அவர் மருது பாண்டியர்களைப் பற்றி, ஆங்கிலேய கவர்னரிடம் புகார் மனுவும் அனுப்பி வைத்திருக்கிறார்.
தொடக்க காலத்தில், அன்பும் ஆதரவுமாக இருந்த உறவு, பின்னாட்களில் கசப்புடன் முடிவடைந்திருக்கிறது. சிவகங்கை அரசாட்சியில் நெருக்கடியான காலத்தில் மருது சகோதரர்கள் துணையாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக, பாளையக்காரர்களின் எழுச்சியை ஒன்றிணைக்கும் பணியையும் செய்திருக்கிறார்கள் என்பதை ஆங்கிலேய அதிகாரிகளின் குறிப்புகளிலிருந்தும், கடிதங்களிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இக்குறிப்புகளில் எங்கும், பெரிய மருது வேலு நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி இல்லை.
வேலு நாச்சியார் இறந்த 1796-ம் ஆண்டு வரை அவரது வாழ்க்கைக் குறிப்புகள் குறித்து எந்தக் குழப்பமும் அக்கால ஆவணங்களில் இருந்ததில்லை. சென்னை மாகாண ஆளுநர் எட்வர்ட் கிளைவ் 06.07.1801-ல் வெளியிட்ட பிரகடனத்தில்கூட, “ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில் உள்ள பலவீனத்தைக் கொண்டு அரசியின் வழியினரான நாலுக் கோட்டை குடும்பத்தின்மீதும் அக்குடும்பத்தின் பங்காளிகள் மீதும், சிவகங்கை பகுதி மக்கள் மீதும் அவர்கள் கொடுங்கோன்மையும் யதேச்சதிகாரத்தையும் பிரயோகித்தார்கள்” என குறிப்பிட்டிருக்கிறார். அவர்கள் என்பது மருது பாண்டியர்களைக் குறிக்கிறது.
இந்தப் பிரகடனத்திற்கு 24 நாட்களுக்கு முன்பு, கர்னல் அக்கினியூவால் விடுவிக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பில், ”அரசனின் மரணத்திற்குப் பின்பு அரசியின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டதால் நாட்டில் முறைகேடான அதிகாரத்தைச் செலுத்திவருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார். முறைகேடான அதிகாரத்தைச் செலுத்தி வருபவர்களாக இதிலும் மருது பாண்டியர்களே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இரு பிரகடனங்கள் தவிர்த்து மேஜர் வெல்ஷ், பாதர் பாச்சு, கோர்லே போன்ற மருது பாண்டியர்களின் சமகாலத்தவர்கள் எழுதிய புத்தகங்களில் இல்லாத ஒரு செய்தி, சிவகங்கை சரித்திரக் குறிப்பில் இல்லாத ஒரு செய்தி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் றெக்கைக் கட்டிப் பறந்தது. அது வேலு நாச்சியார் பெரிய மருதுவைத் திருமணம் செய்துகொண்டார் என்பது.
இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுவது, பெரிய மருதுவின் மரண சாசனம். அவருடைய மரண சாசனத்தில், தன்னுடைய மூத்த மனைவியாக பெரிய மருது வேலு நாச்சியாரைக் குறிப்பிடுகிறார் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால், மருது பாண்டியர்களைத் தூக்கிலிடும்போது உடனிருந்தவரும், மருது பாண்டியர்களின் நண்பரும் ஆங்கிலேய அதிகாரியுமான மேஜர் வெல்ஷ் மருது பாண்டியர்கள் மரண சாசனம் ஏதும் தரவில்லை என்று தெரிவிக்கிறார்.
கோர்லே, பெரிய மருது மட்டும் தனது பேரக் குழந்தைகளான பத்து, பன்னிரண்டு வயது பாலகர்களையும் தன்னோடு சேர்த்துத் தூக்கில் போடுவதற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்ததாகப் பதிவுசெய்துள்ளார். “இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம் என்ன? ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஏதும் ஆயுதம் ஏந்தினார்களா? நள்ளிரவு வரை எங்கள் மடிகளில் படுத்துக் கதைகேட்டு உறங்கிய குழந்தைகளைத் தூக்கிலிட வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்.
மருது பாண்டியர்கள் வெளியிடாத மரண சாசனத்தை ஜெகவீர பாண்டியன் தனது பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரத்தில் வெளியிட்டார். இதற்காக அவர் எடுத்துக்கொண்டது மருது பாண்டியர்களின் வாரிசு ஒருவர் 03.01.1917-ல் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் (ஓ.எஸ்.4/1918), அந்த மனுவோடு சேர்ந்த, பெரிய மருதுவினுடையது என்று சொல்லப்படும் மரண சாசனமும்தான். இந்த மரண சாசனம், “என்னுடைய ஜமீன் வேலு நாச்சியாருக்குப் பாத்தியமாயிருந்தது.
மேற்படியாளை நான் திருமணம் செய்துகொண்டு அவள் மூலமாக மேற்படி சிவகங்கை ஜமீனுக்கு உரிய உயில் சாசனம் பெற்றிருக்கிறேன். என் வாரிசுகளின் விவரம்: என் மனைவியின் பெயர் ராக்காத்தாள். அவள்தான் பட்ட ஸ்திரி. எனக்கு சிவகங்கை ஜமீன் உயில் சாசனம் செய்து கொடுத்த முதல் மனைவி இறந்து ஒரு வருசம் ஆகிறது” எனப் போகிறது. மருது பாண்டியர்கள் தூக்கில் போடப்பட்டு 100 ஆண்டுகள் கழித்து மருது பாண்டியர்களின் வாரிசுகளிடம் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்று கர்னல் அக்கினியூ தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் (28.12.1804) குறிப்பிட்டதே இந்தப் போலியான மரண சாசனம் தாக்கல் செய்ததின் நோக்கமாகும்.
“தற்போதைய ஜமீன்தார் முத்து விஜய ரகுநாத பெரிய உடைய தேவருக்கு எனது கருத்தாக, நூறு ஆண்டுகள் கழித்து சிவகங்கை ஆட்சியை வெள்ளை மருதுவின் வாரிசுகளுக்குத் தரலாம்” என போகிறபோக்கில், அக்கினியூ சொன்னதைக்கொண்டு ஆட்சி அதிகாரத்தையும் பெற எடுத்த நடவடிக்கையாக இந்த மரண சாசனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பின்பு 109/1925 என்ற இந்த மரண சாசனத்தை முன்னிறுத்தி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

வரலாற்றுச் சோகம்

இந்த வழக்குகளின் மீது தீர்ப்பு எழுதிய நீதியரசர் குமாரசாமி சாஸ்திரியார், “இந்த மரண சாசனம் போலியானது. இந்த வழக்குத் தொடர்ந்தவருக்கு வேலு நாச்சியார் இறந்து ஐந்து வருடங்கள் கழித்துதான் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் என்பதுகூட தெரிந்திருக்கவில்லை. வேலு நாச்சியார் இறந்து ஓராண்டு என்கிறது மரண சாசனம். மருது பாண்டியர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தங்களை எந்த இடத்திலும் மன்னர்கள் என்று கூறிக்கொள்ளவில்லை. ஆதீன கர்த்தர்க்கள், ராஜமான்யர், மாற நாட்டு திசைக் காவலர், அமைச்சர் என்றே தங்களை அழைத்துக் கொண்டார்கள்” என்று கூறி வாரிசு தாக்கல் செய்த மரண சாசனம் போலியானது என்று வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
தாயைப் போன்ற நிலையிலிருந்த அரசியை, மனைவி என்று சித்தரிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஒரு போலி மரண சாசன வாக்குமூலம் முன்வைத்த இந்த ஆதாரமற்ற தகவல் பல வரலாற்று ஆசிரியர்களால் வழிமொழியப்பட்டது பெரும் வரலாற்றுச் சோகம். ரஷ்ய அரசி காத்தரீன், இங்கிலாந்து பேரரசி எலிசபெத், டெல்லியின் முதல் அரசி ரஸியா சுல்தானா, மதுரை நாயக்க அரசி மீனாட்சி போன்ற புகழ்பெற்ற பெண் ஆட்சியாளர்களின் அந்தரங்க சாளரத்தையும்கூட சரித்திரம் சில புனைவுகளை வைத்துக் கட்டமைத்திருக்கிறது. இதில் வேலு நாச்சியாரும் தப்பவில்லை.
சரித்திரத்தின் மர்ம முடிச்சுகளை, அதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்போதெல்லாம் அவிழ்த்துக் கொண்டே செல்ல வேண்டியதுதான், உண்மையான வரலாற்றாசிரியர்களின் பணி. நீதிமன்றம் அவரை விடுவித்து, நூறாண்டுகளை நெருங்கப்போகும் நேரத்தில், வரலாறு அவரை விடுவிக்காமல் இருப்பது பெருத்த சோகம்!
-முனைவர் மு. ராஜேந்திரன் இஆப, ‘சோழர் காலச் செப்பேடுகள்’ என்ற நூலின் ஆசிரியர்.

Monday, 30 December 2019

மறவர் ஜமீன்கள்

மறவர் ஜமீன்கள்

மறவர்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர். ஆடிநாடித் திறைவரிசை கெஞ்சிக் கொடுத்தனர். ஈழத்திலும் ஏறாத இமயத்திலும் களங்குதித்துச் செங்குருதிக் குளம்மிதித்து வீராண்மையோடுப் பேராண்மையாற்றி வெற்றிக்கொடி நாட்டினர். இவர்கள் சிந்திய செங்குருதிச் செஞ்சேற்றால், புறமுதுகு காட்டா எலும்புப்போறையால், பாடாந்தரையாய்க் கிடந்த இடங்கள் யாவும், கன்றுங் கறவையும் மேயவும், கன்னலுஞ் செந்நெலுஞ் சாயவும், கங்கையும் வாவியும் பாயவும் வழி வகுத்தன.

சொல்கதைகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் 'தேவர்கள்' என்ற சிறப்புப் பெயர் பெற்றனர். எத்தனையோ காலமாக 'சேதுசமுத்திரம்' எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே 'சேதுபதி' மன்னர் என்ற பெயரும் பெற்றார்.

மேற்கண்ட இரு தகவல்களும் நமக்குச் சொல்வது என்னவெனில் ராமநாதபுரம் பகுதியே ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி. அங்கிருந்து புலம் பெயர்ந்தே இவர்கள் அருகிலிருந்த திருநெல்வேலிச்சீமை போன்ற பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பதே. மறவர்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் தங்கள் தலைவர் எனும் மரியாதையை மன்னர் சேதுபதிக்கே அளித்து வந்தனர் என்பதை 'மறப்பாட்டு' சொல்கிறது. சண்டையிடும் இனமாக மறவர் பற்றிய முதல் குறிப்புகளைக் 'குல வம்சம்' தருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாண்டியர்களோடு மரபு உரிமை பற்றிய தகராறில் கொண்டையம்கோட்டை மறவர்கள் பங்கேற்றது பற்றியும் 'குலவம்சம்' பேசுகிறது. சேதுபதி மன்னரின் தலைமையின் கீழ் இருந்த மறவர்கள், மதுரை பாண்டிய மன்னனைச் சார்ந்தே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பதினெட்டாம் நூற்றாண்டில் மறவர்சீமை என அறியப்பட்டிருந்தது. வடக்கே வெள்ளாற்றின் கரையிலிருந்த அறந்தாங்கியிலிருந்து தெற்கே சாயல்குடி வரையிலுமான கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுமையும் மறவர் சீமையாகும். மேற்கே அது மதுரை வரை நாயக்கரின் ராட்சியம் நீண்டிருந்தது. தஞ்சை மராட்டிய அரசும், புதுக்கோட்டை கள்ளர் பிரதேசமும் வடக்கே சூழ்ந்திருக்க, மேற்கிலும் தெற்கிலும் மதுரை நாயக்கர் அரசு பரவியிருக்க கிழக்கே ஆங்காங்கு போர்ச்சுகீசிய மற்றும் டச்சுக் குடியேற்றங்கள் தென்பட்டன.

நெல்லைச் சீமையில் களக்காடு முதல் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடியைத் தொட்டு நின்ற இராƒபாளையம் வரை மறவர்கள் பரவியிருந்தார்கள். பெரும்பாலான மறவர் பாளையங்கள் இப் பகுதியிலேயே உருவாக்கப்பட்டன.
ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் . உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். கொல்லம்கொண்டான்,கங்கைகொண்டான் மற்றும் சேத்துர் முதலிய மூன்று பாளயம்கள் வனங்காமுடி பண்டார மறவர். சிவகிரி போன்ற நான்கு பாளையப்பட்டுக்கள் வன்னியர் பட்டம் கொண்ட வன்னிகொத்து மறவர்கள் இவர்க்ள் வன்னியர்(பள்ளி) அல்ல என்ற துல்லியமான தகவலைக்கூட பேட் தருகிறார்.

மறவர் ஜமீன்கள்(திருநெல்வேலி)
----------------------------------------------
1. சிவகிரி-சங்கிலி வீர பாண்டிய வன்னியனார்
2. சேத்துர்-ராஜா ராம சேவுக பாண்டிய தேவர் 
3. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
4. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
5. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
6. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
7. ஊர்க்காடு- நெல்ல்லிலே முத்துவேய்ந்த சேதுராயர்
8. தென்காஞ்சி- சீவல மாறன்
9. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
10. திருக்கரங்குடி- சிவராம தலைவனர்
11. ஊற்றுமலை- ஹிருதாலய மருதப்ப பாண்டியன்
12. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
13. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தாமனி பூலிதுரை பாண்டியன்
14. தலைவன் கோட்டை- இரட்டைகுடை இந்திர தலைவனர்(அ) ராம சாமி பாண்டியன்
15. கொடிகுளம்- முருக்கனாட்டு மூவராய தேவர்
16. கடம்பூர்- சீனி வள்ளால சொக்க தலைவனார்(அ) பூலோக பாண்டியன்
17. மனியாச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
18. குற்றாலம்- குற்றால தேவன்
19. புதுகோட்டை(திருநெல்வெலி)- சுட்டால தேவன்
20. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
21. அழகபுரி- சின்னதம்பி வன்னியனார்
22. எழயிரம்பன்னை- இரட்டைகுடை வன்னியனார்
23. தெண்கரை- அருகு தலைவனார் 
24. நடுவகுரிச்சி- வல்லப பாண்டிய தேவர்
----------------------------------------------------
மறவர் சமஸ்தானங்கள் 
*******************************
1. ராமநாதபுரம்- சேதுபதி(சேது செம்பியன்)
2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்(கவுரியர்)
---------------------------------

மறவர் ஜமீன்கள்(ராமநாதபுரம்)
------------------------------------------------
1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்
2. பாளையம்பட்டி - தசரத சின்ன தேவர்
3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்
4. கட்டனூர்- தினுகாட்டு தேவர்
5. அரளிகோட்டை- நல்லன தேவர்
6. செவேரக்கோட்டை - கட்டனதத் தேவர்
7. கார்குடி- பெரிய உடையன தேவர்
8. செம்பனூர்- ராஜ தேவர்
9. கோவனூர்- பூலோக தேவர்
10. ஒரியுர்- உறையூர் தேவர்
11. புகலூர்- செம்பிய தேவர்
12. கமுதி கோட்டை - உக்கிர பாண்டிய தேவர்
13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்
14. ஆப்பனூர்- சிரை மீட்ட ஆதி அரசு தேவர்

Monday, 27 May 2019

25/06/1772 காளையார்கோவில் வரலாற்றில் ஒரு கருப்பு தினம்

காளையார்கோவில் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் 

25-6-1772 காளையர்கோவில் வரலாற்றில் ஒரு கருப்பு தினம். நயவஞ்சம் கம்பளம் விரித்த நாள்:-

கும்பினியர்கள் காளையர்கோவிலில் நிறைவேற்றிய நயவஞ்சகத்தை வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் வெட்கத்துடன் எழுதி வைத்துள்ளனர்.  
Indian Record Service Vestiges of old Madras(1640-1800) Vol -lll என்ற நூல் லண்டனில் வெளியிடப்பட்டது.  
இந்த புத்தகத்தின் 71 ம் பக்கத்தில் உள்ள செய்தியின் சுருக்கம் :-

Londan Packet என்ற பகுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களும், அச்சபையின் உரிமையாளர்கள் அணைவரும் கூடியிருந்தனர்.

ஜெனரல் சுமித் கர்ளல் பான்சோர் இருவரும் சிவகங்கையில் அறகேற்றிய நயவஞ்சக செயலை கேட்க் சகியாம பல வெள்ளை முதலாளிகள் வெளியேறினர். மற்ற அனைவரையும் வெறுப்பில் ஆழ்த்திய நிகழ்வு தான், ஆங்கிலேய வரலாற்றின் அவமான சின்னமாக விழுந்தது.

ஜெனரல் ஸ்மீத் தனது நவாப் அரசருடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டான். இருவரும் இந்தியாவில் உள்ள ஒரு மன்னரை எதிர்த்துப் போரிட முடிவு செய்தனர்.

இந்த போரில் சிவகங்கை சீமையின் படைவீரர்கள் என்னிக்கை மதகுக்கு வரும் வெள்ளம் போல் மணிக்கு மணி அதிகரித்தது. சிவகங்கை வீரர்கள் கும்பினியர்களை குற்றுயிரும் குலையுருமாக்கினார்.  இதனால், தளபதி மார்டீன்சும், ஜோசப் ஸ்மீத்தும் பேச்சுவார்த்தை நடத்துவது போல் பாசாங்கு செய்தனர். இதனை தூதுவன் மூலம் மன்னர் முத்துவடுகநாததேவருக்கு தெரிவித்தனர். அத்தூதுவனோ பேச்சுவார்தை சுமுகமாக முடிந்ததாக எடுத்துரைத்தான். இதை நம்பிய மன்னரும் படைகளை பின்வாங்கச் செய்தார்.  

மன்னர் எந்த பாதுகாப்புமின்றி, காளையர் கோவிலில் வழிபாட்டிற்க்காக இளையராணி கெளரி நாச்சியாருடன் வந்தார். மன்னரைக்கான மக்கள் கூட்டம் அலைமோதியது. மன்னரும் மக்களும் போரை எதிர்பாராத நேரத்தில், கர்னல் பான்சோர் காளையர் கோவிலை முற்றுகையிட்டான்.  மன்னரும் மறவர்களும் ஆயுதங்கள் ஏதுமின்றி நிராயுதபாணியாக நின்ற நிலையில், காளையர்கோவிலில் புகுந்த பான்சோர் மக்களை கொக்களை குருவிகளை சுடுவது போல் சுட்டூ வீழ்த்தினான். 

ஆலயத்தில் உள்ள மற்றவர்கள் மன்னரை தடுத்தனர்.  போர்க்கவசம் அணியவேண்டிய மன்னனின் மார்பில் சந்தனம் மட்டுமே நிறைந்திருந்தது. 

வெற்றுடம்புடன் வெள்ளயர்களை நோக்கி வந்தார் வேந்தர் முத்துவடுகநாததேவர். சந்நிதி வாசலில் சிங்கம் ஒன்று குககைக்குள்ளிருந்து சீறிவருவது போல் நின்றார்.  

வீரத்திற்க்கு இலக்கணம் தெரியாத பான்சோரின் துப்பாக்கி குண்டுகள் வீரப்பேரரசரின் மார்ப்பில் பாய்ந்தது.தன்னாட்சிக்கு தன் உயிர் கொடுத்த வீரனை மண்மகள் அனைத்துக் கொண்டாள். 

வாழ்க வீரப்பேரரசர் முத்துவடுகநாததேவர் புகழ்...!!!